இந்திய பிரஜை ஒருவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், சட்டப்படி பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால், வீட்டில் இருந்தபடியே எம்-பாஸ்போர்ட் சேவா (mPassport seva) செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், mPassport seva ஆப் மூலம் எளிதில் பாஸ்போர்ட் பெறலாம். முதலில் செல்போனில் mPassport seva ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
ஆப்பில் உள்நுழைந்ததும், விண்ணபதாரர் பெயரை பதிவு செய்ய வேண்டும். அடுத்து, அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, பெயர், பிறந்த தேதி, இ -மெயில் முகவரி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்ட வேண்டும்.
பின்னர், மாநில பாஸ்போர்ட் அலுவலகத்தை தேர்வு செய்த உடன், உள்நுழைவு ஐடி, கடவுச்சொல், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறைகள் முடிந்த உடன் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர் இ -மெயிலுக்கு சரிபார்ப்பு இணைப்பு வரும்.
அந்த லிங்கை கிளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும். அதில் உள்ளவைகள் நிரப்ப வேண்டும். பின்னர் முகவரி, தொடர்பு உள்ளிட்டவைகள் நிரப்பிய பின்னர், கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நடைமுறைகள் முடிந்த பின்பு, பாஸ்போர்ட் மையத்திற்குச் சென்று ஆவணங்களை சரிபார்த்த பின்னர், விண்ணப்பதாரர் முகவரிக்கு பாஸ்போர்ட் அனுப்பிவைக்கப்பார்கள். இப்படி எளிதான முறையில் பாஸ்பேர்ட் பெற முடியும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.