புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!
Oct 26, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்விக் கொள்கை சிறந்த இந்தியா கனவை நனவாக்கும்: அமித்ஷா!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானம் (எஸ்.ஜி.வி.பி.) சார்பில் பூஜ்ய பூரணி சுவாமி ஸ்மிருதி மஹோத்சவம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில், “ஆளுமை மேம்பாடு சிறப்பாக இல்லாவிட்டால், நம் தேசத்தை நம்மால் கட்டமைக்க முடியாது.

குருகுலக் கல்வி முறை ஆளுமை வளர்ச்சியின் பாரம்பரியத்தை நன்கு உள்வாங்கி இருக்கிறது. இந்த ஸ்ரீசுவாமி நாராயண் குருகுல பல்கலைக்கழகம் பிரதிஸ்தானத்திற்கு வரும் ஒரு குழந்தை, தேச பக்தராகவும், நன்கு கற்றறிந்த குடிமகனாகவும் சமூகத்திற்குத் திரும்புகிறது.

இந்திய கலாச்சாரம், சனாதன கலாச்சாரம் மற்றும் பக்தியின் அனைத்து மதிப்புகளும் இங்குள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. இந்த குருகுலம் குஜராத்துக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பல நல்ல மற்றும் வெற்றிகரமான குடிமக்களை வழங்கியுள்ளது.

போதைப் பொருள் இல்லாத வாழ்க்கை, இறை வழிபாடு, நல்ல மனப்பான்மை, வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை அனுமதிக்காமல் இருப்பது, பசு சேவை முதல் விவசாயம் வரை நிலத்துடன் இணைந்திருப்பது போன்ற விழுமியங்களுடன் சமஸ்கிருதம், சாஸ்திரம், இசை, விளையாட்டு உள்ளிட்ட முழுமையான கல்விக்கான சூழல் இங்கு சிறப்பாக உள்ளது.

சுவாமி நாராயண் அமைப்பின் பல்வேறு நிறுவனங்களின் குருகுலங்கள் குஜராத்தில் செயல்படாமல் இருந்திருந்தால், மாநிலத்தில் கல்வி பின்தங்கி இருந்திருக்கும். அணுக முடியாத பழங்குடிப் பகுதிகளில் மதமாற்றத்தைத் தடுக்க சுவாமி நாராயண் அமைப்பு குருகுலங்களைத் தொடங்கியது.

பின்னர், அவற்றின் மூலம் பழங்குடியின குழந்தைகளை சனாதன தர்மத்துடன் இணைத்தது. அவர்களுக்கு கல்வியை வழங்கி, வாழ்க்கையில் உயரங்களை அடைய இந்த அமைப்பு தைரியத்தை அளித்தது. எஸ்.ஜி.வி.பி குருகுலம் என்பது தேசபக்தி, ஆன்மீகம் மற்றும் நவீன கல்வி ஆகியவற்றின் கலவையாகும்.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் உலகெங்கிலும் பாராட்டப்படுகிறது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா பலவீனமான நிலையில் இருந்தது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா உலகின் முதல் நாடாக மாற வேண்டும் என்ற உறுதியுடன் முன்னேறி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 2047-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், உலகின் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும். 2014-ம் ஆண்டில், இந்தியா உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று 5-வது இடத்தில் உள்ளது.

புதிய கல்விக் கொள்கை நமது பண்டைய கல்வி பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது. இது நவீனத்துவத்தையும் பழங்கால இந்தியக் கல்வி முறையையும் இணைப்பாக கொண்டுள்ளது. இதை பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவார்கள்” என்று கூறினார்.

Tags: Amit ShahAhmedabadPujya Purani Swami Smriti Mahotsav
ShareTweetSendShare
Previous Post

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

Next Post

இதுவரை 1.25 கோடி சொத்து அட்டைகள் விநியோகம்: மத்திய அரசு!

Related News

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies