கோயம்புத்தூரையும் பெங்களூரையும் இணைக்கும் வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள X பதிவில்,
கோயம்புத்தூரையும் பெங்களூரையும் இணைக்கும் ஐந்தாவது #வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த #பிரதமர்மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த உலகத் தரம் வாய்ந்த ரயில், இரு மாநிலங்களில் உள்ள நமது மக்களின் இணைப்பு, வணிகம் மற்றும் வாழ்க்கையை எளிமைப்படுத்துவது, பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.
கோயம்புத்தூரையும் பெங்களூரையும் இணைக்கும் ஐந்தாவது #வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த #பிரதமர்மோடி அவர்களுக்கு நன்றி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த உலகத் தரம் வாய்ந்த ரயில், இரு மாநிலங்களில் உள்ள நமது மக்களின் இணைப்பு, வணிகம் மற்றும் வாழ்க்கையை எளிமைப்படுத்துவது,… pic.twitter.com/ZeTFMbs3pO
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 30, 2023
பிரதமர் மோடியின் தமிழ் மக்கள் மீதுள்ள அபரிமிதமான அன்பு, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் ₹45,769 கோடி ரயில்வே திட்டங்களிலும், நிகழாண்டின் சாதனை பட்ஜெட்டில் ₹6,080 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதிலும், 75 ரயில் நிலையங்களை உலகத்தரம் வாய்ந்த ரயில்வே கட்டமைப்புகளாக மேம்படுத்தியதிலும் பிரதிபலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.