புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வதற்கு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் நாளை புத்தாண்டு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நட்சத்திர விடுதிகள், சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட பல இடங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும், பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாவை அனுபவிக்கவும் மற்றும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் ரோஜா தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, பைன் மரக் காடுகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களைப் பார்த்து ரசித்து மகிழ்கின்றனர்.
இதனால், கொடைக்கானலில் உள்ள விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.