ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!
Mar 15, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சிறை சென்ற நகைக்கடை ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 31, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைகள் திருடிய நகைக்கடை ஊழியர்கள். வேலியே பயிரை மேய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம். இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டு நகைகளை பறிமுதல் செய்து மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் ஜூவல்லரி பிரபல கடையில் 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள சுரேஷ் ஜூவல்லரி என்ற பிரபல நகை கடையில் 50 க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு ஷோகேஸில் இருந்த தங்க நகைகள் குறைவாக இருந்ததை மேலாளர் கண்டுபிடித்தனர். பின்னர் கடை ஊழியர் யாருக்கும் தெரியாமல் நகைகளை பரிசோதனை செய்த போது தங்க நகை வெள்ளி நகைகளும் மாயமாகி இருந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி.

தொடர்ந்து பார்க்கும் போது விற்பனையாளரக பணிபுரிந்த அருமனை பகுதியை சேர்ந்த அனிஷ் (29) என்பவர் எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. ஒரு கட்டத்தில் அனீஷ் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆடம்பரமாக புதிய வீடு கட்ட பட்ட நிலையில் உரிமையாளர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல்துறையினர் அனிஷை மார்த்தாண்டம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, இதில் அவர் அங்குள்ள பம்மம் பகுதியை சேர்ந்த ஷாலினி மற்றும் அபிஷா ஆகிய இரு பெண் ஊழியர்கள் உடந்தையுடன் சிறுக சிறுக கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டார்.

இதில் திருடிய நகைகள் விற்பனை ஆகும் போது உதவிய இரு பெண்களுக்கும் பங்கை கொடுத்துள்ளேன் எனவும் அனீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் திருடிய அனைத்து நகைகளும் ஸ்டாக்கில் இருப்பது போன்றே கம்யூட்டரில் அந்த பெண் ஊழியர்கள் பதிவு செய்து வந்தனர். நாங்கள் சிக்கி கொள்வோம் என சிறிதளவு கூட எதிர்பார்க்கவில்லை எனவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர், திருடிய 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, ஒரு BMW சொகுசு இருச்சக்கர வாகனம், ஆப்பிள் ஐ ஃபோன் உட்பட இரண்டு விலை உயர்ந்த ஃபோன் களும் பறிமுதல் செய்தனர். நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.

தொடர்ந்து பெண் ஊழியர்கள் இருவர் உட்பட மூவரையும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகை கடை ஊழியர்களே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடி சிறைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Tags: kanyakumari3 arrestedjewel shop
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி : சென்னையில் இன்று தொடக்கம்!

Next Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் : விவேகானந்தா கேந்திரா தலைவருக்கு அழைப்பிதழ்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies