நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டு மக்கள் வாணவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இன்றுடன் 2023 ஆம் ஆண்டு முடிவடைகிறது. நள்ளிரவு 12 மணி முதல் 2024ஆம் ஆண்டு தொடங்குகிறது. இதை ஆட்டம் , பாட்டம, கொண்டாட்டத்துடன் வரவேற்க மக்கள் தயாராகிவிட்டனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் நேரக்கணக்கு படி நியூசிலாந்தில் புத்தாண்டு 2024 பிறந்துள்ளது. இதனை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் தயாராக இருந்த வான வேடிக்கைகள் வெடிக்கத்தொடங்கின. மக்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் குரலெழுப்பி 2024ஆம் ஆண்டை வரவேற்றனர்.