ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
24 நாடுகள் பங்கேற்கும் ஆசியான் கோப்பை கால்பந்து போட்டி ஜனவரி 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. கத்தாரில் நடைபெறும் இப்போட்டியானது ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த 24 நாடுகளும் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
‘ஏ’ பிரிவில் கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் ஆகிய அணிகளும், ‘சி’ பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், ஆங்காங், பாலஸ் தீன் ஆகிய அணிகளும் , ‘டி’ பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்னாம் , ‘இ’ பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன், ‘எப்’ பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் 3வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 9 மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் 13 ஆம் தேதி விளையாடவுள்ளது. உஸ்பெகிஸ்தானுடன் 18ஆம் தேதியும், சிரியாவுடன் 23ஆம் தேதியும் விளையாடுகிறது.
மேலும் ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் அணியோடு இணைந்து உள்ளார்.
இந்திய அணி வீரர்கள் :
அமரிந்தர் சிங், குர்பிரீத் சிங் சாந்து, விஷால் சைத் (கோல் கீப்பர்கள்), ஆகாஸ் மிஸ்ரா, லால் சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிதில் புஜாரி, பிரித்தம் கோட்டல், ராகுல் பெகே, சந்தேஷ்ஜிங் கன், சுபாஷிஸ் போஸ் (பின்களம்), அணிருத் தாபா, பிராண் டன் பெர்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங் மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங், உதாந்த் சிங் (நடுகளம்), இஷான் பண்டிதா சாங்கே, மன்வீர் சிங், ராகுல் கனோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப்சிங் (முன் களம்).