இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கேரளாவில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 82 ஆக உள்ளது. மேலும், 344 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
இதேபோல், கர்நாடகாவில் புதிதாக 183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 51 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிராவில் புதிதாக 172 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 613 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 38 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 177 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் புதிதாக 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
பீகாரில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.