புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைவருக்கும் செழிப்பு, அமைதி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை உட்பட பல நகரங்களில் வானவேடிக்கையுடன் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். மெரினா எலியட்ஸ், பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். .
இதேபோல் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஆங்கில புத்தாண்டு களைகட்டின. நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் கேக் வெட்டியும், ஆடிப்பாடியும் பொதுமக்கள் புத்தாண்டை வழிபட்டனர்.
இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் சிறப்பான புத்தாண்டு (2024) வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு அனைவருக்கும் செழிப்பு, அமைதி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை அளிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.