2023-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு (என்.ஐ.ஏ.) 94.70% சதவீத வழக்குகளில் கைது நடவடிக்கை மேற்கொண்டதோடு, சுமார் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ம் ஆண்டில் 94.70 சதவீத தண்டனை விகிதத்தை பதிவு செய்திருக்கிறது. மேலும், சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது.
2022-ம் ஆண்டு 490 குற்றவாளிகளுடன் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், 2023-ம் ஆண்டு 625 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 28 சதவீதம் அதிகமாகும்.
அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பான வழக்குகளில் 65 பேர், ஜிஹாதி தீவிரவாத வழக்குகளில் 114 பேர், மனிதக் கடத்தல் வழக்குகளில் 45 பேர், தீவிரவாத மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட 28 பேர் மற்றும் இடதுசாரி தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 76 பேர் அடங்குவர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். வலையமைப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, என்.ஐ.ஏ. 2 வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது. 55 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. மேலும், 253 சோதனைகளை நடத்தி, 27 பேரைக் கைது செய்தது. தவிர, 18 சொத்துக்களை பறிமுதல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.