2024 ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி, ஏற்காடு நட்சத்திர விடுதியில் கொண்டாட்டம் ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டியது.
2024 ஆங்கிலப் புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. இதனையொட்டி, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
புத்தாண்டையொட்டி, ஏற்காட்டில் உள்ள உள்ள நட்சத்திர தங்கும் விடுதிகளில் கலை நிகழ்ச்சிகள் மிக பிரமாண்ட முறையில் நடைபெற்றன. மேலும், ஆட்டம், பாட்டம் என புத்தாண்டை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
கலை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனித்தனியாக விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. அத்துடன், சிறந்த தம்பதி மற்றும் சிறந்த குடும்பங்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், ஏற்காட்டில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.