அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், பொது மக்களுக்கு வழங்கினார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது X பக்கத்தில், பாரதத்தின் ஆன்மீக கலாச்சாரத்தின் அடையாளமாக திகழும் அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி 22, 2024 அன்று வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
நாடே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று, எனது இல்லத்தின் அருகில் வசிப்பவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று, ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கினோம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22 -ம் தேதி அன்று நமது பாரத பிரதமர் கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.
அனைவரும் இந்தியாவின் மாபெரும் ஆன்மீகப் பெருவிழாவில் சங்கமிப்போம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.