அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் துருப்புக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்ட பல்வேறு அடுக்கு உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
மாற்றங்களைக் கண்டறிவதற்கான செயற்கைக்கோள்களின் திறனை மேம்படுத்துதல், AI தொடர்பான தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும், தரவு பதிவிறக்கங்களைக் குறைப்பதற்கும், தேவையான தகவல்களை மட்டும் பெறுவதற்கும் இது முக்கியமானது என்றும் அவர் கூறினார். விண்கலங்கள் ஒரு நாட்டின் எல்லைகள் மற்றும் அண்டை பகுதிகளை கண்காணிக்கும் திறன் கொண்டவை என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
இவை அனைத்தையும் செயற்கைக்கோள்களிலிருந்து பார்க்க முடியும். இந்த திறன் நமக்கு மகத்தான ஆற்றலை அளிக்கிறது. இதை கையாள்வதற்காக நாங்கள் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் இப்போது வேறுவிதமான சிந்தனை உள்ளது, அதை நாம் மிகவும் விமர்சன முறையில் பார்க்க வேண்டும், ஏனென்றால் (எந்தவொரு) நாட்டின் சக்தியும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் திறன் முக்கியமானது என்றும் சோமநாத் குறிப்பிட்டார்.