பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.
நண்பகல் 12 மணியளவில், திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். விமானப் போக்குவரத்து, ரயில், சாலை, கப்பல், உயர் கல்வி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகள் தொடர்பான ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
திருச்சி வரும் பிரதமரை விமான நிலையத்திர்ல தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி , முதலமைச்சசர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். பிரதமரின் வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிற்பகல் 3.15 மணியளவில் லட்சத்தீவின் அகத்தி செல்லும் பிரதமர் அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். ஜனவரி 4, 2024 அன்று நண்பகல் 12 மணியளவில், லட்சத்தீவின் கவரட்டிக்குச் செல்லும் பிரதமர், அங்கு லட்சத்தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொலைத்தொடர்பு, குடிநீர், சூரிய சக்தி, சுகாதாரம் போன்ற துறைகள் தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.