தமிழ்நாட்டில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை மத்திய அமைச்சர் Dr. L. முருகன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதி நாட்டிற்கு அர்ப்பணித்தல், பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழா.
சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர் – மேட்டூர் அணை இரட்டை ரயில்பாதைத் திட்டம், மதுரை – தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைத்திட்டம், திருச்சிராப்பள்ளி – மானாமதுரை – விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் – தென்காசி மின்மயமாக்கல், செங்கோட்டை – தென்காசி – திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டப்பணிகள்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதி நாட்டிற்கு அர்ப்பணித்தல், பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழா.
சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர் – மேட்டூர் அணை இரட்டை ரயில்பாதைத்… pic.twitter.com/5Pl7VtpFDG
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 1, 2024
திருச்சி – கல்லகம் பிரிவில் நான்கு வழிச்சாலை, கல்லகம் – மீன்சுருட்டி 4/2 வழிச்சாலை, செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை, காரைக்குடி – ராமநாதபுரம் இருவழிச் சாலை, சேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி நான்கு வழிச்சாலை ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தல், முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அடிக்கல்.
தமிழ்நாட்டில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தமிழ்நாடு வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இருகரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறேன்.