சீனியர் தேசிய மல்யுத்த போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக குழு அறிவித்துள்ளது.
சீனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிவடைந்த பிறகு பிப்ரவரி 9 முதல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய மல்யுத்த போட்டிகள் சோனேபட் மற்றும் பாட்டியாலாவில் தொடங்கவுள்ளது.
ஆண்களுக்கான போட்டி (கிரேக்கோ-ரோமன் மற்றும் ஃப்ரீ-ஸ்டைல்) சாய் என்ஆர்சி சோனேபட்டிலும், பெண்களுக்கான போட்டி பாட்டியாலாவின் சாய் என்.எஸ்.என்.ஐ.எஸ்ஸிலும் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் நடைபெறும் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்ரவரி 5-ஆம் தேதி முடிவடைந்தவுடன், ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்று மற்றும் உலகத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக தேசிய மல்யுத்த போட்டி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழு தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேசிய பயிற்சி முகாம் (என்சிசி) நடத்தப்படும். ஆண்களுக்கான போட்டி (கிரேக்கோ-ரோமன் மற்றும் ஃப்ரீ-ஸ்டைல்) SAI NRC சோனேபட்டில் நடைபெறும் , அதே சமயம் பெண்களுக்கான போட்டி பாட்டியாலா SAI NSNIS இல் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ” இந்த போட்டிகள் 2024 ஒலிம்பிக் போட்டி வரை நீடிக்கும், மேலும் இந்த போட்டிகள் ஒலிம்பிக் தகுதிப் சுற்றுக்கான பயிற்சியாக அமையும் ” என்று கூறினார்.