அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் சுற்றுசூழலுக்கு உகந்த கோல்ப் கார் சேவை தொடங்கப்பட்டது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று அயோத்தியில் மக்களின் பயன்பாட்டிற்கு கோல்ப் கார் சேவை தொடங்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு ஆணையம் சார்பில், ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அயோத்தியை சுற்றிப்பார்க்க அவர்களின் வசதிக்கேற்ப, சுற்றுசூழலுக்கு உகந்த கோல்ப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு சக்கர இ-வாகனத்தில் நான்கு நபர்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த இ-வாகனம் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் EV கார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், அயோத்தியில் கடந்த ஆண்டு ‘தீபோத்சவ்’ திட்டத்தில் இருந்து இ-கார்ட் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவையில் உள்ள வாகனத்தில் 6 பயணிகள் அமரும் வசதி உள்ளது. மேலும் முக்கியமா ஹனுமன்கர்ஹி மற்றும் ஸ்ரீ ராமர் கோவில் வளாகம் மற்றும் பிற யாத்திரை தலங்களுக்கு வயதான பக்தர்கள் பயணிக்க உதவுகிறது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில், பேஷன் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், ஏடிஏவின் தனியார் கூட்டாண்மை மூலம் EV வாகனம் செயல்முறையின் கீழ் ‘மை EV பிளஸ்’ என்ற பெயரில் வாகன சேவையை வழங்குகிறது.
ஜனவரி 6 முதல் அயோத்தி விமான நிலையத்திற்கு வரும் யாத்ரீகர்களுக்கு இந்த சேவை கிடைக்கும் என்று இந்த நிறுவனத்தின் இயக்குனர் பிரசாந்த் கர்க் குறிப்பிட்டுள்ளார்.