சேலத்தில் புதிய பாஜக அலுவலகத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திறந்து வைத்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், சேலம் நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, சேலம் பாராளுமன்றத் தொகுதி தமிழக பாஜக அலுவலகத்தைத் திறந்து வைத்தோம்.
இன்றைய தினம், சேலம் நாமக்கல் சாலையில் அமைந்துள்ள, சேலம் பாராளுமன்றத் தொகுதி @BJP4Tamilnadu அலுவலகத்தைத் திறந்து வைத்தோம். நிகழ்ச்சியில், @BJP4Tamilnadu மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் திரு @KPRamalingamMP, சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் திரு சண்முகநாதன், சேலம் மாநகர் மாவட்டத் தலைவர்… pic.twitter.com/7c8YpaHHD4
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் K.P. இராமலிங்கம், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு, பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், 400க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் பெரும்பங்கினை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.