இந்தியா எக்ஸ்போசாடை அறிமுகப்படுத்துவது மிகவும் ஊக்கமளிக்கிறது என அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர் கரன் ஜானி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் 2024 ஜனவரி 1 அன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இது புவி வட்டப்பாதையில் இருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலா உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் பேராசிரியரான கரன் ஜானி, விண்வெளி அறிவியலின் பல எல்லைகளில் இந்தியா முன்னணியில் இருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” இது தான் கருந்துளைகளை பற்றி படிப்பதற்கான சரியான நேரம், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிப்பது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது. ஒரு இந்திய விஞ்ஞானியாக, இந்த வளர்ச்சிகளை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் ” என்று கூறினார்.