இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதே ககன்யான் திட்டம் ஆகும்.
இந்த திட்டத்திற்கு முன்பாக இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருக்கும்.
1984-ல் சோவியத் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை விமானி மற்றும் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்தார். தற்போது இவர் சர்வதேச விண்வெளி நிலையதிற்கு சென்று பயிற்சி தொடங்கவுள்ளார்.
மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இதுவரை, 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பூமியைச் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 1 ஆம் தேதி இஸ்ரோ பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் எக்ஸ் போசாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய பிறகு இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” 2024 ஆண்டு ககன்யான் திட்டத்தின் தயார்நிலை ஆண்டாக இருக்கும்” என்று கூறினார்.
மேலும் அவர், ” எங்கள் இலக்கு 2025 இறுதிக்குள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்வதாகும், அதற்காக நாங்கள் பல சோதனைகளை செய்யவேண்டும். மனித விண்வெளிப் பயணத்திற்கு முன்பு விண்வெளி வீரர்கள் இல்லாமல் மூன்று ஆளில்லா விமானங்களை விண்ணில் செலுத்தி சோதனை செய்யவேண்டும்.
அதில் இரண்டு ஆளில்லா விமான சோதனையை இந்த ஆண்டே முடிக்க திட்டமிட்டுளோம், எல்லாம் சரியாக நடக்க வேண்டும்,” என்று கூறினார்.