புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் இன்று வினியோகிக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள்.
அந்த வகையில் ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.