ஞானவாபி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம்: தொல்லியல் துறை!
Aug 3, 2025, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம்: தொல்லியல் துறை!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 11:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இதையொட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி முகலாய அரசர் ஒளரங்கசீப் ஆட்சி காலத்தில் 17-ம் நூற்றாண்டில் இந்துக் கோவில்களை இடித்து விட்டு கட்டப்பட்டது என்று இந்துக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆகவே, மசூதியில் ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து சமூகத்தைச் சேர்ந்த சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து மசூதி நிர்வாகத் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

ஆனால், வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க 2 நீதிமன்றங்களும் மறுத்து விட்டன. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஞானவாபி வளாகத்தில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த 5 மாதங்களாக ஆய்வு நடத்தினர். அப்போது, மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்துக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர், மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த சூழலில், மசூதி ஆய்வு விவகாரம் தொடர்பான வழக்கு, வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஞானவாபி மசூதி தொடர்பான ஆய்வறிக்கையை, இன்னும் 4 வாரங்களுக்கு பொது வெளியில் வெளியிட வேண்டாம் என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

இத்தகவலை இந்து அமைப்பு தரப்பின் வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ் தெரிவித்திருக்கிறார். அதாவது, ஞானவாபி வளாகத்தின் பராமரிப்பை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். தேவைப்பட்டால் தொல்லியல் துறை மேலும் ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் அனுமதி வழங்கலாம் என்று கூறியிருந்தார்.

இதனடிப்படையில் ஆய்வறிக்கையை 4 வாரங்களுக்கு வெளியிட வேண்டாம் என்று தொல்லியல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Tags: courtGnanavabi MosqueArchaeological Survey
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேசம் செல்லும் குடியரசு துணைத் தலைவர்!

Next Post

சிறந்த டி20 வீரருக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு!

Related News

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies