ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க நாளான இன்று 16 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் தமிழக அணி குஜராத் அணியுடன் விளையாடி வருகிறது.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89வது பதிப்பு இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘எலைட்’, ‘பிளேட்’ என்று இரு பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எலைட் பிரிவில் உள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

எலைட் ‘ஏ’ பிரிவு :

நடப்பு சாம்பியன் சவுராஷ்டிரா, 2 முறை சாம்பியன் விதர்பா, ஜார்கண்ட், மாராட்டியம், ராஜஸ்தான், அரியானா, சர்வீசஸ், மணிப்பூர் ஆகிய அணிகள் எலைட் ‘ஏ’ பிரிவுவில் இடம்பெற்றுள்ளனர்.

எலைட் ‘பி’ பிரிவு :

‘பி’ பிரிவில் 41 முறை சாம்பியனான மும்பை, பெங்கால், ஆந்திரா, கேரளா, சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், அசாம், பீகார் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.

எலைட் ‘சி’ பிரிவு :

கர்நாடகா, பஞ்சாப், ரெயில்வே, தமிழ்நாடு, கோவா, குஜராத், திரிபுரா, சண்டிகார் ஆகிய அணிகள் எலைட் ‘சி’ பிரிவுவில் இடம்பெற்றுள்ளனர்.

எலைட் ‘டி’ பிரிவு :

‘டி’ பிரிவில் மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், இமாசலபிரதேசம், பரோடா, டெல்லி, ஒடிசா, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

மோசமான இடத்தை பெறும் 2 அணிகள் அடுத்த சீசனில் ‘பிளேட்’ பிரிவுக்கு தரம் இறக்கப்படும். ‘பிளேட்’ பிரிவில், கடந்த சீசனில் சொதப்பியதால் எலைட் பிரிவில் இருந்து தரம் இறக்கப்பட்ட நாகலாந்து, ஐதராபாத் மற்றும் மேகாலயா, சிக்கிம், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் ‘எலைட்’ என்ற முன்னணி பிரிவுக்கு முன்னேறும்.

இதன் லீக் சுற்று பிப்ரவரி 19-ஆம் தேதி முடிவடைகிறது. கால்இறுதி போட்டிகள் பிப்.23 ஆம் தேதியும், அரைஇறுதி போட்டிகள் மார்ச் 2-ஆம் தேதியும், இறுதிப்போட்டி மார்ச் 10ஆம் தேதியும் தொடங்குகிறது.

தொடக்க நாளான இன்று 16 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் குஜராத் மாநிலம் வல்சத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சாய்கிஷோர் தலைமையிலான தமிழக அணி, சின்டன் கஜா தலைமையிலான குஜராத் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

Tags: Cricketcricket matchranjith trophy
ShareTweetSendShare
Previous Post

திமுகவை அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும்! – அண்ணாமலை

Next Post

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies