போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி என்கவுன்ட்டர் வழக்கு: மாடல் அழகி சுட்டுக்கொலை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாடல் அழகி, ஜாமீனில் வெளியே வந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் பிரபல தாதா சந்தீப் கடோலி. இவரது காதலி மாடல் அழகி திவ்யா பஹுஜா. இந்த சூழலில், கடந்த 2016-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாதா சந்தீப் கடோலி போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணையில், அவரது காதலியும், மாடல் அழகியுமான திவ்யா பஹுஜாவின் உதவியால் இந்த போலி என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட போலி என்கவுன்ட்டரில் தொடர்புடைய நபர்களை போலீஸார் கைது செய்தனர்.

அந்த வகையில், மாடல் அழகி திவ்யாவும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திவ்யாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் திவ்யா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை. இதுகுறித்து திவ்யா குடும்பத்தினர் குருகிராம் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குருகிராமில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திவ்யா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த திவ்யாவுக்கும், ஹோட்டல் உரிமையாளர் அபிஜித் சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவருடன் நெருக்கமாக இருந்ததை திவ்யா புகைப்படம் எடுத்திருக்கிறார். பின்னர், அப்புகைப்படங்களைக் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறார்.

இதில் ஏற்பட்ட மோதலில், அபிஜித் சிங் துப்பாக்கியால் திவ்யாவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது உடலை ஹோட்டல் ஊழியர்கள் ஹேம்ராஜ், ஓம்பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸில் சிக்கினர். இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்” என்றனர்.

இதற்கிடையே, பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை திவ்யா குடும்பத்தினர் மறுத்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட ரவுடி சந்தீப்பின் சகோதரர் பிராம் பிரகாஷ், சகோதரி சுதேஷ் ஆகியோரின் உத்தரவின் பேரில், அபிஜித் சிங் கூலிப்படையாக செயல்பட்டு, திவ்யாவை சுட்டுக் கொன்றதாக போலீஸில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Shoot deadFake EncounterModel queen
ShareTweetSendShare
Previous Post

மிக நீண்ட சாலை கொண்ட நாடுகளில் இந்தியா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் – ஆனந்த் மஹிந்திரா! 

Next Post

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies