பாரதப் பிரதமர் மோடியை ஆகா, ஓகோவென புகழ்ந்து தள்ளிய சீன நாளிதழ்!
Sep 9, 2025, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதப் பிரதமர் மோடியை ஆகா, ஓகோவென புகழ்ந்து தள்ளிய சீன நாளிதழ்!

Web Desk by Web Desk
Jan 5, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ், இந்திய பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை ஆகிய துறைகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது என்று சீன நாளிதழ் பாராட்டி கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் அரசு நாளிதழான “குளோபல் டைம்ஸ்” பத்திரிகையில், பியூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மைய இயக்குநர் சாங் ஜியோடாங், இந்தியாவின் அரசியல், பொருளாதார மாற்றம் குறித்து கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.

அக்கட்டுரையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக அரங்கில் அடைந்த முக்கியத்துவம் குறித்தும், அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் இந்தியா தனக்கான சொந்த அடையாளத்தை உருவாக்கி வருவது குறித்தும் குறிப்பிட்டிருக்கும் சாங் ஜியோடாங், மோடியின் நிர்வாகத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

அக்கட்டுரையில் சாங் ஜியோடாங் கூறுகையில், “பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியா மிகுந்த தன்னம்பிக்கையுடனும், திட்டமிடலுடனும் உலக அரங்கில் வலம் வரத் தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக, கடந்த 4 ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பாரத் கதையாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. நகர்ப்புற கட்டமைப்பு மேம்பட்டிருக்கிறது. உலக நாடுகளுடனான உறவில் சரிசமமான இடத்தை இந்தியா அடைந்து வருகிறது.

சீனா – இந்தியா இடையிலான வர்த்தக உறவில் இந்தியாவின் அணுகுமுறை மாறி இருக்கிறது. முதலில், சீனாவின் இறக்குமதியை குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்தியது. தற்போது, தனது ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.

அரசியல் மற்றும் கலாச்சார தளத்தில் மேற்கத்திய நாடுகளின் தாக்கத்திலிருந்து விலகி, இந்தியா தனது சொந்த அடையாளத்தை நோக்கி நகரந்திருக்கிறது. அதாவது, இந்தியா காலனிய பாதிப்பிலிருந்து விடுபட்டு, சொந்த அடையாளத்தை வலுப்படுத்தி வருகிறது.

சர்வதேச உறவுகளிலும் இந்தியா மிகுந்த திட்டமிடலுடன் செயல்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய பல்வேறு சர்வதேச தரப்புகளுடன் நல்ல உறவை பராமரித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் வலுவான, உறுதிமிக்க தரப்பாக மாறி இருக்கும் இந்தியா, உலக அரங்கில் முக்கிய சக்தியாக உருவெடுத்திருக்கிறது. சர்வதேச உறவில் குறுகியகால கட்டத்தில் இத்தகைய மாற்றம் மிக அரிதானது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: China JournalPM ModiPraised
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் 10.5 அடி உயர ராமர் சிலை திறப்பு!

Next Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies