கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா காவல்துறைக்கு இன்று ‘Terrorizer’s 111’ குழுவால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில், இந்திய அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார் சுற்றுலாப் பயணிகள் அருங்காட்சியகத்திற்குள் நுழைய தடை விதித்தனர். இதை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மெயில் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக, இந்தியாவின் பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மிரட்டல்கள் போலியானவை.
இதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஒரு நாள் மூடப்பட்டன. மேலும், கர்நாடகாவில் உள்ள ராஜ்பவனை வெடி வைத்து தகர்க்கப் போவதாக, மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது விசாரித்ததில், அவர் விளையாட்டாகக் கூறியது தெரியவந்தது.