ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வீரர் பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருந்தது.
தற்போது 2023 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் தமிழக வீரர் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின், இரண்டு ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.