வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் - ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!
Sep 20, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் உள்ளோம் – ஹாக்கி மகளிர் அணி கேப்டன்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 06:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒலிம்பிக் போட்டியில் தகுதி சுற்று ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளதைக் குறித்து இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று வரும் ஜனவரி 13 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற உள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘பி’பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இத்தாலி, அமெரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஜெர்மனி, ஜப்பான், சிலி, செக் குடியரசு ஆகிய அணிகள் உள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவுடன் விளையாடுகிறது. 14ஆம் தேதி நியூசிலாந்துடனும், 16ஆம் தேதி இத்தாலியுடனும் விளையாடவுள்ளது.

முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும். இதனால் இந்திய மகளிர் அணிக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெறும் ஜார்கண்ட் மைதானத்தில், இதற்கு முன்னர் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இது எங்களுக்கு வாழ்வா சாவா என்ற ஆட்டம் என்று இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் சவிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர், “நமது அணி மிகவும் உற்சாகமாக உள்ளது. ஜார்கண்டில் சில நல்ல பயிற்சிகள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது அணிக்குக் கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இதற்காகக் கடுமையான பயிற்சிகளுடன் தயாராகி உள்ளோம்.

மேலும் கடந்த காலங்களில் ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீராங்கனைகள் அணியில் உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்த தொடரில் எவ்வாறு செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை நாங்கள் கற்றுள்ளோம். இது எங்களுக்கு வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

Tags: indian hockey teamindian womens hockey teamindian womens hockey team captain
Share
Tweet
SendShare
Previous Post

‘மொஹல்லா கிளினிக்குகள்’ மீதான ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

Next Post

சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியல்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies