மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 
Mar 28, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.  மெட்ரோ ரயிலில் பயணிப்போர் குறித்து தவறான தகவல்களை தனியார் இதழில், வழங்கியுள்ளததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளிலும் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

23 டிசம்பர் 2023 தேதியிட்ட தனியார் பொருளாதார இதழில், “இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ கட்டமைப்பு போதுமான பயணிகளை ஈர்க்கத் தவறிவிட்டது” என்று ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.  இந்தக் கட்டுரை, தவறான தகவல்களை வழங்கியுள்ளது.

நாட்டில் உள்ள மெட்ரோ அமைப்புகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு  கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒன்றே கால் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளும் தற்போது லாபத்தை ஈட்டுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு பொதுப்போக்குவரத்து முறையும் முக்கியமானது. வசதியான, நம்பகமான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து முறைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

பன்னோக்கு போக்குவரத்து முறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதற்காக அரசு சமீபத்தில் பிரதமரின் இ-பஸ் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதில் 5 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.

அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நகர்ப்புறங்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிறந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது.  மெட்ரோ ரயில் அமைப்புகள் பெண்கள் மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான பயண முறையாக உள்ளது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: metro train
ShareTweetSendShare
Previous Post

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்: டி.ஜி.பி.க்களுக்கு அமித்ஷா வலியுறுத்தல்!

Next Post

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

Related News

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க ஒரு கப்பலுக்கு ரூ.18 கோடி : உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் அழுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை:அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள்!

NDA :இந்திய ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான மனு – சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

கஞ்சா புகைத்ததை தட்டி கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு!

ராம நவமி – பால ராமர் சிலையில் திலகமாக விழுந்த சூரிய கதிர்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 வரை குறைப்பு-மத்திய அரசு அதிரடி!

திண்டுக்கல்:சிறுவர்களை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்திய நாதக!

திருப்பூர் :பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 வீட்டு உபயோக சிலிண்டர்கள் பறிமுதல்!

சென்னை:பொதுமக்களை அடிக்க கை ஓங்கிய திமுக கவுன்சிலர்!

“Marine engineer” படுகொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

சேலம்:அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது தவெகவினர் புகார்!

ஈரானின் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

திருவாரூரில் வரும் 2-ம் தேதி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது – பினராயி விஜயன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies