ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மாட்டோம்: தமிழக அரசு உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 6, 2024, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்றும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் மாநிலம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது. ஆனாலும், போலீஸார் அனுமதி வழங்கவில்லை. எனவே, காவல்துறைக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணையின்போது, தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் தரப்பில், எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் வகையில், நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதுபோன்ற அணிவகுப்புகள், ஊர்வலங்கள் நடத்தும்போது, பேனர்கள், பதாகைகள் எடுத்துச் செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏதேனும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், வைப்புத் தொகையை திருப்பிப் பெற முடியாது” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Tags: high courtOrderRSS RALLY
Share
Tweet
SendShare
Previous Post

மெட்ரோ ரயில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது! 

Next Post

குடியரசு தின விழா : தமிழகம் சார்பில் உத்திரமேரூர் கல்வெட்டு அலங்கார ஊர்தி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies