பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக சிறையில் இருந்த ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் ஹுப்ளி மாவட்டம் சன்னப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பூசாரி. இவர் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, 1992ல் ஹுப்பள்ளியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்த் பூசாரிக்கு ஹுப்ளி நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை விஎச்பி தலைவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.