தரத்தில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும்! - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரத்தில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 05:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்) 77-வது நிறுவன தின நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (06-01-2024) பங்கேற்று தலைமை உரையாற்றினார்.

பி.ஐ.எஸ் மற்றும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டி.பி.ஐ.ஐ.டி) இணைந்து  ‘இந்தியாவில் தர சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான உரையாடல்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,

தரநிலைகளை சர்வதேச தரங்களுக்கு இணையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் இதை அடைய முடியும் என்று தெரிவித்தார். தரத்தில் இந்தியா முன்னோடியாக இருக்க வேண்டும்.

ஹால்மார்க் நகைகள் தொடர்பாக, பி.ஐ.எஸ்.ஸின் முயற்சிகளைப் பாராட்டியவர், கட்டாய ஹால்மார்க் முத்திரை 343 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

2014-ம் ஆண்டு வரை 106 பொருட்களுக்கு 14 தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் மட்டுமே இருந்தன எனவும் ஆனால், இப்போது, 672 தயாரிப்புகளுக்கு 156 தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் உள்ளன என்று தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழிநடத்தும் கடந்த சில ஆண்டுகளில்தான் 90 சதவீத தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகள் கொண்டுவரப்பட்டதாக கூறினார்.  இளம் தலைமுறையினர் தரம் மற்றும் வளர்ச்சி அடைந்த பாரதத்தின் தூதர்களாக மாற வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

பருத்தி சோதனைக்காக 21 ஆய்வகங்களை அமைக்க ரூ .40 கோடி முதலீடு செய்ய பி.ஐ.எஸ். சமீபத்தில் ஒப்புக்கொண்டது என்று அவர் கூறினார்.

பி.ஐ.எஸ்-ஸிடம் போதுமான நிதி இருப்பதாகக் கூறிய அவர், சிறந்த செயல்பாடுகளுக்காக வெளிப்படையான சூழல் அமைப்பு மற்றும் உயர் கண்காணிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தரப்படுத்தல் தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், நுகர்வோர் குழுக்கள், கல்வியாளர்கள், பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னணி உற்பத்தியாளர்கள், வணிகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் டிபிஐஐடி ஆகியவற்றின் பிரதிநிதிகள்  இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags: Central Ministerpiyush goyal
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீகாந்த் பூசாரிக்கு ஜாமின் : சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

Next Post

பத்திரப்பதிவு துறையில் ‘Murthy Fees’ தொகையை வசூலிக்க, தமிழகம் முழுவதும் புரோக்கர்கள் நியமித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies