Murthy Fees’ கட்டினால்தான் பத்திரப்பதிவே நடக்கும் என்ற நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில்,
அரசு விதித்துள்ள கட்டணத்திற்குக் கூடுதலாக, மேலும் ஒரு தொகை கட்ட, பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்குச் செல்லும் இந்த ‘Murthy Fees’ தொகையை வசூலிக்க, தமிழகம்… pic.twitter.com/5D3z48pm1T
— K.Annamalai (@annamalai_k) January 6, 2024
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில், அரசு விதித்துள்ள கட்டணத்திற்குக் கூடுதலாக, மேலும் ஒரு தொகை கட்ட, பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்குச் செல்லும் இந்த ‘Murthy Fees’ தொகையை வசூலிக்க, தமிழகம் முழுவதும் ப்ரோக்கர்களை நியமித்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.
தங்கள் கடின உழைப்பில் வீடு, நிலம் வாங்க விரும்பும் பொதுமக்கள், ‘Murthy Fees’ கட்டினால்தான் பத்திரப்பதிவே நடக்கும் என்ற நிலையில் இன்று தமிழகம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.