பெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ என்ற தனுஷ் பாடிய பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து “உன் ஒளியிலே” என்ற பாடல் வெளியானது.
இந்நிலையில் இப்படம் 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த ட்ரைலரில் “பசியோட சுத்திட்டிருக்கிற ஒரு சிங்கத்துக்கு ஒரு இரை கிடைக்குது. அதை எப்படியாவது தூக்கிட்டு போயிடலாமுனு ஒரு கழுதைப் புலி கூட்டமே அலையுது, அப்போ அந்த இரையை ஒரு ஓநாய் தூக்கிட்டுப் போனா என்ன ஆகும்,” என டிரைலரின் முடிவில் இடம் பெறும் பின்னணிக் குரல்தான் இந்தப் படத்தின் கதையாக இருக்கப் போகிறது.
சிவராஜ் குமார் சில வினாடிகள் மட்டுமே டிரைலரில் வந்து போகிறார். பிரியங்கா மோகன் ஆச்சரியப்பட வைப்பார் எனத் தெரிகிறது. சந்தீப் கிஷனுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது.
இருப்பினும், தமிழில் கடந்த வருடம் வந்த ‘ஆகஸ்ட் 16, 1947’, மலையாளத்தில் 2021ல் வெளிவந்த ‘மரைக்காயர்’ படங்களை இப்படத்தின் சில காட்சிகள் ஞாபகப்படுத்துகிறது.