கதாநாயகனாக களமிறங்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கதாநாயகனாக களமிறங்கும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்!

Murugesan M by Murugesan M
Jan 6, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் ஹெய்ன் தற்போது திரைப்படத்தின் கதாநாயகனாக களமிறங்கவுள்ளார்.

சண்டை இயக்குனர்களான கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம் அகியோரைத் தொடர்ந்து தற்போது பீட்டர் ஹெய்னும் கதாநாயகனை இணையவுள்ளார். பீட்டர் ஹெய்ன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பீட்டர் ஹெய்ன் நடிக்கும் படத்தை ரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் சார்பில் ஏ.எம் சவுத்ரி தயாரிக்கிறார்கள். மா.வெற்றி என்ற புதுமுகம் இயக்குனர் இயக்குகிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர், ” நானும் என் நண்பர் சவுத்ரியும் இணைந்து மாஸ்டர் பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் எனப் பல காலமாகப் பேசி வந்தோம். இந்தியாவில் உருவான பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது.

உலகளவில் இந்திய சினிமாவை அறிய வைத்தவர், அவரை கவுரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளோம். படம் மிகப்பெரும் பொருட்செலவில் முன்னணி கலைஞர்களுடன் உருவாகவுள்ளது.

எங்களுக்கு இயக்குனர் வெற்றியை ரொம்ப காலமாகத் தெரியும். அவர் மாஸ்டரை கவரும்படி ஒரு கதையைச் சொல்லியுள்ளார். சினிமாவில் உலகளவில் மொழிகள் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்ஷன் படம், காமெடிப்படம். அந்த வகையில் மாஸ்டரை வைத்து பெரிய ஆக்ஷன் படம் தயாரிக்கவிருக்கிறோம். உலகமே வியக்கும் சாதனைகள் செய்த மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி” எனக் கூறினார்.

அவரைத் தொடரந்துப் பேசிய படத்தின் நாயகன் பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன், “இயக்குநர் வெற்றி, முதலில் ஒரு ஐடியாவாகத்தான் இதைச் சொன்னார். பிறகு நான் நடிக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள்தான் இப்படத்திற்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என்றும் கூறினார்” என தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் தான் காட்டுவாசியாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தில் நடிக்க, தான் தனியாக பயிற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்த அவர், படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை படக்குழு அணுகவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், படத்தில் முன்னணி நட்சத்திரங்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாகவும், அது பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

Tags: cinemanews
ShareTweetSendShare
Previous Post

நடுவானில் திடீரென திறந்த கதவு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Next Post

கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலர் வெளியானது!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies