அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16 அன்று தொடங்குகிறது.
வாரணாசியைச் சேர்ந்த லக்ஷ்மி காந்த் தீட்சித், ஜனவரி 22ஆம் தேதி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவின் முக்கிய சடங்குகளை செய்வார். ஜனவரி 14 முதல் ஜனவரி 22 வரை அயோத்தியில் அமிர்த மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.
கிராமங்கள் தோறும் (பூத் மட்டத்தில்) ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரடியாக ஒளிபரப்ப செய்ய பெரிய திரைகள் அமைக்க தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை சாதாரண மக்கள் காண வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.