புதுச்சேரியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் மருந்து தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் திடீரென உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கிருந்தவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், வருமான வரி ஆலோசகர் சித்ரா, வணிக வரி ஆணையர் முருகானந்தம், ஆனந்தன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், ஜெயபாரதி, ஆனந்தன், முருகானந்தம் ஆகிய மூன்று பேரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.