இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இன்று இரண்டாம் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணிக்கு கோப்பை உறுதியாகிவிடும், அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு கோப்பையை வெல்லவேண்டும் என்றால் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
ஆகவே இரு அணிகளும் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது. மேலும் இப்போட்டியில் இந்திய அணி 34 % வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 66% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.