உலகின் உயரமான "புர்ஜ் கலிஃபா"வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் உயரமான “புர்ஜ் கலிஃபா”வை ஓவர்டேக் செய்யப்போகும் ஜெட்டா டவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தற்போது உலகின் உயரமான கட்டடமாகத் திகழும் 2,717 அடி உயரம் கொண்ட துபாய் நகரின் “புர்ஜ் கலிஃபா”வை ஜெட்டா டவர் ஓவர் டேக் செய்யப்போகிறது. இதனால், உலகின் உயரமான கட்டடம் என்ற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப் போகிறது.

மேற்கு ஆசியாவில் உள்ள மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் 2,717 அடி உயரம் கொண்ட உலகிலேயே உயரமான கட்டடமான “புர்ஜ் கலிஃபா” (Burj Khalifa) அமைந்திருக்கிறது.

2004-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள், 2009-ம் ஆண்டுதான் நிறைவடைந்தது. 163 மாடிகளைக் கொண்ட இக்கட்டடம், 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டடம் கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.

இந்த புர்ஜ் கலீஃபாவைக் காண்பதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். மேலும், பெரிய பெரிய நிறுவனங்கள் புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்வதை பெருமையைகக் கருதுகின்றன.

இந்த நிலையில்தான், உலகின் உயரமான கட்டடம் என்கிற அந்தஸ்தை புர்ஜ் கலிஃபா இழக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆம், இதை விட உயரமாக கட்டடத்தைக் கட்ட சௌதி அரேபியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது மேற்கு ஆசியாவில் உள்ள மற்றொரு அரபு நாடான சௌதி அரேபியாவில், செங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரம் ஜெட்டா. இந்நகரின் வடக்கே ஜெட்டா எகனாமிக் சிட்டி எனும் பெயரில் நகர மேம்படுத்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு, கிங்க்டம் டவர் என்று அழைக்கப்படும் ஜெட்டா டவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் உலகில் இதுவரை இல்லாத கட்டடக்கலை வேலைப்பாடுகள் மற்றும் நுணுக்கங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை சௌதி அரேபிய இளவரசர் அல் வலீத் பின் தலால் மிகவும் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். இக்கட்டடத்தை வடிவமைப்பவர் அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் என்கிற கட்டட வடிவமைப்பாளர்.

இவர்தான், புர்ஜ் கலிஃபா கட்டடத்தையும் வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைவழி முறைகளைக் கையாண்டு இக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டடத்தின் 157-வது மாடியில் சுமார் 100 அடி விட்டத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து வானையும், நகரையும் ரசிக்கும் வகையில் ஒரு அரங்கமும் அமையவிருக்கிறது. இக்கட்டடம் கட்டி முடிக்கப்படும்போது, 3,281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகிலேயே ஒரு கிலோ மீட்டர் உயரம் கொண்ட முதல் கட்டடம் என்னும் புகழைப் பெறும் என்கிறார்கள்.

Tags: saudi arabiadubaiBurj KhalifaTallest towerWill Beat
ShareTweetSendShare
Previous Post

இது தான் பொங்கல் கொண்டாட நல்ல நேரம்!

Next Post

பொங்கலின் வகைகளைப் பற்றி பார்ப்போம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies