தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு பெயர்களில் மக்கள் கொண்டாடுகின்றனர்.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உறுதுணை புரியும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புது பானையில் பொங்கல் வைத்து, பொங்கி வரும் அழகைப் பார்த்து ரசித்து, குடும்பத்துடன் சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறி, வெல்லம் கலந்து நெய் ஊற்றி சூரியனுக்கு படையலிட்டு வழிபடுவார்கள் தமிழர்கள்.
தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மகரசங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் கொண்டாடுகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை ‘லொஹரி’ என்ற பெயரிலும், அரியானாவில் ‘மாகி’ என்ற பெயரிலும், இமாச்சல பிரதேசத்தில் ‘மகா சாஜா’ என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரிலேயும், ராஜஸ்தானில் ‘மகர் சங்ராத்’ என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடப்படுகின்றனர். இவ்விழாவை அறுவடை நாளாகவும், பாவங்களைத் தீர்க்கும் நாளாகவும் மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, இம்மாநில மக்கள் மகரசங்கராந்தி தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அறுவடை திருநாளை அசாமில் ‘போஹாலி பிஹூ’ என்ற பெயரிலும், கர்நாடகாவில் ’சுகி’ என்ற பெயரிலும், ஆந்திராவில் மகரசங்கராந்தி என்ற பெயரிலும் மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
குஜராத்தில் ’உத்ராயண்’ என்ற பெயரில் அறுவடைத் திருவிழாவை மக்கள் கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவில் பட்டம் விடும் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகும். இவ்வாறு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலு