கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!
Mar 15, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்கில் ஓடுதளத்தில் முதல்முறையாக இரவில் தரையிறங்கிய விமானம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப் படையின், ‘சி-130 ஜே’ சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கி இருக்கிறது.

லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் கார்கில் மாவட்டம், மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 8,780 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதன் தலைநகரம் கார்கில். இந்த நகரின் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கும்.

குளிர் காலத்தில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கும் கீழ் செல்லும். இப்பகுதி உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவத்தினர் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்திய விமானப்படையின் சி-130 ஜே விமானம் சமீபத்தில் கார்கில் விமான ஓடுதளத்தில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.

விமானப்படையின் கருட் கமாண்டோ படையைச் சேர்ந்த வீரர்கள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு துல்லியமாக வழிகாட்டும் டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்தனர்” என்று தெரிவித்திருக்கிறது.

போர் காலத்தின்போது எதிரிகளுக்குத் தெரியாமல் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திடீரென சென்று தாக்குதல் நடத்த டெரெய்ன் மாஸ்கிங் தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், மலைப்பாங்கான பகுதியில் போர், இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எத்தகைய சவாலான சூழ்நிலையிலும் திறம்பட செயல்பட இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக இந்த சாதனை அமைந்திருக்கிறது என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

மேம்பட்ட தரையிறங்கும் மைதானங்கள் உட்பட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள அனைத்து விமான நிலையங்களின் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதில், இராணுவ அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தவுலத் பெக் ஓல்டி மற்றும் நியோமா விமான ஓடுதளங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 16,700 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதுதான், உலகின் மிக உயரமான விமான ஓடுதளம் என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல, நியோமா விமான ஓடுதளம் 13,000 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

Tags: landKargil hillAirforce PlaneNight time
ShareTweetSendShare
Previous Post

2 மாநிலங்களில் 72.72% கொரோனா பாதிப்பு!

Next Post

ரசிகரை கண்ணத்தில் அடித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies