தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இது பழமொழியாக இருந்தாலும் தை திங்கள் பிறந்தவுடன் நம் வாழ்க்கை புதுமையாகத் தான் மாறுகிறது.
இந்த புத்தாண்டின் முதல் பண்டிகையை புத்துணர்ச்சியுடன் புதிய ஆடை அணிந்து, புதுவிதமாய் கொண்டாட நாம் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் இப்பொங்கல் பண்டிகையை கொண்டாட உகந்த நல்ல நேரங்களை பற்றி பார்ப்போம்.
தை திருநாளின் முதல் நாள் காலை 6.45 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பொங்கல் பானை வைத்து, 9 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ சூர்ய நாராயணசுவாமிக்கு பொங்கல் ஆராதனை செய்து பொங்கல் சாப்பிட நல்ல நேரமாகும். அல்லது மதியம் 12.00 மணிக்குமேல் பொங்கல் பானை வைத்து 2.00 மணிக்குள் பொங்கல் ஆராதனை செய்து பொங்கல் சாப்பிட நல்ல நேரமாகும்.
தை திங்களின் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் அன்று பகல் 12.00 மணிக்குமேல் பொங்கல் வைத்து 03.00 மணிக்குள் மாடுகளை நீராட்டவும், கோ பூஜை செய்யவும், மாட்டுப்பொங்கல் கூறவும் என்று கூறவும் நல்ல நேரமாகும். மேலும் மாலை 4.30 மணிக்குமேல் இரவு 7.45 மணிக்குள் மாட்டுப்பொங்கல் என்று கூறவும் நல்ல நேரமாகும்.
தை திங்களின் மூன்றாம் நாளான காணும் பொங்கல் அன்று நம் உறவினர், நண்பர்களுடன் காலை 9.00 மணிக்குமேல் 12.00 மணிக்குள் கோவில்களுக்கு சென்று பூஜை செய்யது கொண்டாட நல்ல நேரமாகும்.
இந்த பொங்கல் திருநாளை நல்ல நேரங்களில் கொண்டாடி, நம் வாழ்வில் மெம்மேலும் வளர்ச்சிபெறுவோம்.