தமிழகம் – மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது.
இதில் தமிழக அணி சாய் கிஷோர் தலைமையில் களமிறங்கியது. கடந்த சீசனிலேயே சில போட்டிகளில் சாய் கிஷோர் தமிழக அணியை வழிநடத்தி இருந்ததால், இம்முறை அவர் முழு நேர கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் முதல் போட்டியில் தமிழகம் அணியுடன் குஜராத் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
அந்த அணியின் உமாங் குமார் 76 ரன்களையும், மனன் 65 ரன்களையும் சேர்த்தார். அதேபோல் தமிழக அணியில் முகமது 5 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய தமிழக அணி 250 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
119 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, பவுலிங்கில் அசத்திய முகமது அதிரடியாக விளையாடி 85 ரன்களையும், சந்தீப் வாரியர் 38 ரன்களையும் சேர்த்தனர்.
இதனால் தமிழக அணி இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணி 312 ரன்களை விளாசியது.
அந்த அணியின் உமாங் குமார் 89 ரன்களையும், ரிப்பல் படேல் 81 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலமாக தமிழக அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்பின் களமிறங்கிய தமிழக அணிக்கு தொடக்கமே சோதனையாக அமைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களிலும், கேப்டன் சாய் கிஷோர் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த பாபா இந்திரஜித் 39 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் 39 ரன்களும், விஜய் சங்கர் 16 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, 168 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் வந்த டெய்லண்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தமிழக அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. டிரா செய்ய முடியாமல் முதல் போட்டியிலேயே தமிழக அணி தோல்வியடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.