ஆந்திராவில் 102 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூட்டுறவு நிறுவனம் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த பாரத லட்சியப் பயணத்தின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
102 ஆண்டுகள் பழமையான ஆந்திராவைச் சேர்ந்த கூட்டுறவுக் குழுமத்தின் உறுப்பினர் சயீத் குவாஜா முய்ஹுதீன் பேசுகையில், தற்போதைய அரசின் நடவடிக்கைகளால் தான் நபார்டு வங்கி வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரூபாய் கடன் வழங்க முன்வந்ததாக பிரதமரிடம் தெரிவித்தார்.
இதனால் தங்களது கூட்டுறவுக் குழுவினர் ஐந்து சேமிப்புக் கிடங்குகளை கட்ட முடிந்ததாக அவர் கூறினார். தானியங்களை சேமிப்பில் வைத்துள்ள விவசாயிகள் மின்னணு சேமிப்புக் கிடங்கிலிருந்து ரசீதுகளைப் பெறுவதாகவும், இதனால் அவர்கள் வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் கடன்களைப் பெற முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
பன்னோக்கு வசதி மையம் விவசாயிகளை மின்னணு மண்டிகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவற்றுடன் இணைப்பதாக அவர் கூறினார். இது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சிறந்த விலையை உறுதி செய்கிறது என்றும் இதன் மூலம் இடைத்தரகர் தலையீடுகள் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தங்களது குழுவில் பெண் விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் உட்பட 5600 பேர் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கூட்டுறவுக் குழுவை நடத்தி வரும் உள்ளூர் விவசாயிகளின் முயற்சிக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகள் மூலம் வேளாண் உள்கட்டமைப்பு நிதி வழங்கப்படுவது குறித்து உள்ளூர் விவசாயிகள் அறிந்து கொண்டதாகவும், சிறு விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைப் பாதுகாத்து வைத்திருந்து சிறந்த விலைக்கு விற்க சேமிப்புக் கிடங்கு திட்டம் உதவியதாகவும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் உண்மையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன என்று அவர் கூறினார். கிசான் கடன் அட்டைகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் மூலம் மதிப்புக் கூட்டுதல் சேவைகளையும் திரு சையீது குவாஜா வழங்கி வருகிறார்.
இயற்கை விவசாயம் குறித்து பேசிய பிரதமர், நானோ யூரியாவை ஆகியவற்றைப் பயன்படுத்தி உரங்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளிடையே தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், உரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்த மண் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் பிரதமர் கூறினார்.
“அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்க என்ற உணர்வோடு அரசு செயல்படும்போது, திட்டங்கள் கடைசி நபரையும் சென்றடைவதாக பிரதமர் தெரிவித்தார்.
பயன்கள் ஒரு சிலருக்கு விடுபட்டு இருந்தால் கூட அவர்களுக்கும் ‘மோடியின் உத்தரவாத வாகனம் அரசு திட்டங்களின் பயன்களை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.