திமுகவைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறி, பல கோடி ரூபாய் பெற்றார் என புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். அங்கும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.
வரும் 12-ம் தேதி தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நாளாக அமைய உள்ளது.