ஊட்டி மலை இரயில் வரும் 11-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்கிறது மலை இரயில். காலை 7 மணி 10 நிமிடத்திற்கு மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
அழகிய மலைகளின் நடுவே சுமார் 5 மணி நேரம் பயணித்து, கண்களுக்கு விருந்து படைக்கிறது.
இந்த இரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்ல முதல் வகுப்பு கட்டணமாக 600 ரூபாயும் சாதாரண வகுப்பு கட்டணமாக 295 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரயிலும், உதகையிலிருந்து குன்னூர் வரை செல்வதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று இரயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக, ஊட்டி மலை இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் 11-ம் தேதி வரை ஊட்டி மலை இரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்டம் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை வருவதால், விரைவில் ஊட்டி மலை இரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.