நாடு முழுவதும், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் பிறநிதிகளைத் தேர்வு செய்ய ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, தேர்தலில் போட்டியிடும் நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, வைப்புத் தொகை செலுத்த வேண்டும். குறிப்பாக, மக்களவை தேர்தலில் போட்டியிட ரூ.25,000, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரூ.10,000 டெப்பாசிட் செய்ய வேண்டும்.
மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்களாக இருந்தால் இந்த தொகையில் பாதி தொகையை டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வைப்புத் தொகை கடந்த பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என்றும் இதனை ரூ.10,000 உயர்த்த வேண்டும் என்றும், இந்த கோரிக்கை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது விளம்பரத்திற்காக தக்கல் செய்யப்பட்ட வழக்கு என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.