குஜராத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வந்த ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் மோடியுடன் காரில் ஊர்வலமாக சென்றார்.
குஜராத்தில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக 2019ஆம் ஆண்டுக்கு பிறகு உலக முதலீட்டாளர் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு இன்றும், நாளையும் காந்தி நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நேற்று குஜராத் வந்தார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், முகமது பின் சயீத் அல் நஹ்யானும் ஒரே காரில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகன ஊர்வலம் சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் குவிந்திருந்த மக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊர்வலத்தை முடித்துக்கொண்டு இருவரும் காந்திநகர் சென்றடைந்தனர்.
The people of Ahmedabad gave a warm welcome to HH @MohamedBinZayed. pic.twitter.com/vo1uCUL3CI
— Narendra Modi (@narendramodi) January 9, 2024