சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ், நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டது.
ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் இச்சம்பவம் காலை 9.15 மணியளவில் ரயில் தடம் புரண்டது. இந்த ரயில் நிலையம் ரயில்கள் முடிவடையும் ஒரு முனைய நிலையமாகும். இதில் சார்மினார் எக்ஸ்பிரஸ் இரயில் நிலையத்தில் நிற்காமல் தாண்டிச் சென்று, சுவரில் மோதியதால், ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த சம்பவத்தில் ரயிலின் கதவுகளுக்கு அருகில் நின்றிருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில், விபத்து குறித்து இரயில்வே பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.