வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு
Sep 2, 2026, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீடுகள்தோறும் ஓவியங்கள்..வீதிகள்தோறும் கலைப்பொருட்கள்.. சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 13, 2026, 09:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒடிசாவில் உள்ள ஒரு ஒட்டுமொத்த கிராமமே இந்திய ஓவியக்கலைக்கும், கைவினை கலைக்கும் சான்றாக விளங்கி வருகிறது. அந்த கிராமம் குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பார்க்கும் இடமெல்லாம் ஓவியங்கள்…வீதிகள்தோறும் கைவினைப் பொருட்கள்…வீடுகள்தோறும் அழகிய அலங்காரங்கள்…

இதுதான், இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கிராமமான ரகுராஜ்பூர்.

ஓடிசாவின் புரி நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ரகுராஜ்பூரில் மொத்தமே 150 வீடுகள்தான் உள்ளன. ஆனால், அவை ஒவ்வொன்றிலுமே குறைந்தது 2 கைவினைக் கலைஞர்களும், ஓவியர்களும் இருக்கின்றனர்.

ரகுராஜ்பூர் கிராமத்தின் ஆன்மாவாக பட்டசித்ரா ஓவியங்கள் விளங்குகின்றன. ‘பட்டா’ என்றால் துணி. ‘சித்ரா’ என்றால் ஓவியம். பாரம்பரிய துணிகளில் இயற்கை வண்ணங்களை கொண்டு சித்திரங்களை வரைவதால், இந்த வகை ஓவியங்கள் பட்டசித்ரா என அழைக்கப்படுகின்றன.

புரி ஜெகன்நாதர் குறித்தும், இந்துப் புராணங்கள் பற்றியும், மகாபாரதம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் பட்டசித்ரா ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.


ஓவியங்களை தவிர்த்து, பாரம்பரிய முகமூடிகள், பனை ஓலை வேலைப்பாடுகள், காகிதக் கூழ் பொம்மைகள், மரச்சிற்பங்கள் உள்ளிட்டவைக்கும் ரகுராஜ்பூர் புகழ்பெற்று விளங்குகிறது. அத்துடன், புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞரான கேளுச்சரண மகோபாத்திரா (Kelucharan Mohapatra) பிறந்த ஊர் என்ற பெருமையும் இக்கிராமத்திற்கு உண்டு.

வீடுகள்தோறும் ஓவியர்களும், கைவினைக் கலைஞர்களும் உள்ளதால், ஒட்டுமொத்த கிராமமே ஒரு கலைக்கூடம் போல காட்சியளிக்கிறது. இந்த கிராமத்திற்குள் நுழைந்தால், ஏதோ திறந்தவெளி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்துவிட்டோமோ என்ற எண்ணம் பலருக்கும் எழும்.

2000ம் ஆண்டு இந்திய கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை, (INTACH) ரகுராஜ்பூரை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது. இதன் மூலம் இக்கிராமம் மேலும் பிரபலமடைந்தது. பட்டசித்ரா ஓவியங்களை வாங்குவதற்காவும், கலைஞர்கள் ஓவியம் வரைவதைத் நேரடியாகப் பார்க்கவும் சுற்றுலா பயணிகளும், கலை ஆர்வலர்களும் தொடர்ச்சியாக ரகுராஜ்பூருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Tags: CraftsHeritageArtisanIndiaodishavillagecultureRaghurajpurIndigenous
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

Next Post

காரைக்காலில் இன்று பாஜக பொதுக்கூட்டம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies